24.4.10

இருப்பு என்கிற வெற்றிடம்


கவனப்பிசகொன்றை தூண்டிலில்
மாட்டி நீருள் எறிகிறான்
ஆழத்தில் அமிழும் வளையூசியில்
சிக்கிய மணல் துகளுடன்
மீண்டெழும் தூண்டிலை தரையிருத்தி
மணலுடன் வீடேகும் அவனது வாணலி
கொதிப்படைய சமைத்துண்கிறான்
ஒரு துளி பசியை பின்னான பசியற்ற
பொழுதில் துளையடைத்த ஈய
வாளியுடன் செல்கிறான்
நீர் நோக்கி மீண்டும்
இம்முறை அவனது வெற்றிடம்
நிரம்புகிறது
ஒளியூடாடும் உடலிலி மீன்கள்.
********************

7 கருத்துகள்:

  1. அன்பு ஆதிரன்,

    "நீர் நோக்கி மீண்டும் இம்முறை அவனது வெற்றிடம் நிரம்புகிறது ஒளியூடாடும் உடலிலி மீன்கள்".

    அமெரிக்கையான கவிதை ஆதிரன்... படித்து படித்து பிரமித்து போயிருக்கிறேன் உங்களுடைய எழுத்தை படித்து... பத்மாவின் மூலம் ஒரு நல்ல படைப்பாளியின் அறிமுகம் எனக்கு... கடைசி மூன்று வரிகளில் கவிதையின் வீச்சு பன்மடங்காகிறது என்று தோன்றுகிறது...பசியற்ற பொழுது... ஒளியூடாடும் உடலிலி மீன்கள்... அற்புதம் ஆதிரன்... தொடர்ந்து படிக்கிறேன்... வருகிறேன்... நமக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ஆதிரன்...

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  2. நமக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ஆதிரன்...

    for me too

    :)

    பதிலளிநீக்கு
  3. thanks nesamithran.

    tips again!?
    enaiya vechu kaamadi keemadi pannalaiye!?

    பதிலளிநீக்கு
  4. நா டிப்ஸ் கேட்டா தான் காமெடி .
    கேட்டவங்கலாம் ஜாம்பவான் .நடத்துங்க

    பதிலளிநீக்கு