19.4.10

மன்னிக்கவும்

விருப்பமான விருப்பமான பெண்கள் : முட்டுவேன் கொல் என்று ஊரைப்பார்த்து கதறிய அவ்வையார். சென்றுவா மகனே என்று பாடி களித்தீர்த்த சுந்தராம்பாள். உறுதி குழையாத அன்பின் - ஆங் ஸான் ஷுகி(Aung San Suu Kyi). வலியின் ஓவியை பிரைடா காலா. வலியின் கவிஞை சில்வியா ப்ளாத். தமிழ் திரை இசை பாடலாசிரியர் தாமரை. ஆளுமை அருந்ததி ராய். அழகி நந்திதா தாஸ். பேரழகி ஜமுனா. பெரும்பேரழகி சல்மா ஹயக்.

இது பிரபலமானவர்களில் எனக்குப்பிடித்த பெண்கள். எனக்குவிருப்பமான சுற்றமும் நட்பும் பற்றி நான் குறிப்பிடப்போவதில்லை.

***************************

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன்.....மனிதன்.... மனிதம்..............மனிதா...மனி.. மனி... மனி...மன்னிக்கவும் ரெகார்ட் கீறல் விழுந்துள்ளதால் இந்த வரியே திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது. சவுண்ட் சர்விஸ் பார்ட்டி ப்ளேயரைப் போட்டுவிட்டு விட்டு ரெண்டு இட்லி கெட்டிச் சட்டினி வைத்து சாப்பிட்டு வருவதாக சொல்லி போயிருக்கிறான்.

பொறுத்திருங்கள்.

****************************
எவ்வளவு எமாற்றுகாரர்களாய் இருக்கிறார்கள் இந்த சினிமா இயக்குனர்கள் என்பதற்கு மறுபடியும் ஒரு அத்தாச்சி 'பையா'. கொஞ்ச நாளுக்கு முன்ன 'படிக்காதவன்' என்கிற ரஜினியின் மருமான் நடிச்ச படத்த ரீ- மேக்கியிருக்கார் திருவாளர் லிங்குசாமி. அதுலயும் இந்த தமன்னா பொண்ணுதான் .... ஹையோ.. ஹையோ.
******************

நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை:

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

நீங்க சொன்னா சரிதானுங்க மாமோவ்வ்...........

**********************************

3 கருத்துகள்:

 1. கலவை சரியான கலவை

  சவுண்ட் சர்வீஸ் பார்ட்டி வந்ததும் வேற பாட்ட போட்டுட்டாரா ஆதிரன் சார்

  எனக்குப் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்ததா
  //காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்//

  பதிலளிநீக்கு
 2. பிடித்த 10 பெண்கள் - நல்ல வேகம்.
  ஸல்மா​ஹைக் நடித்த Frida படம் பார்த்து விடுங்கள்.ஃப்ரைதா காலா-வின் வாழ்க்கை வரலாறு.
  ஃப்ரைதாவாக - ஸல்மா.

  பதிலளிநீக்கு
 3. I have seen atleast 20 times jegan.. !

  That is very brisky song nesan.

  thanks. both of you.

  பதிலளிநீக்கு