எங்கிருந்து தொடங்குகிறது இந்த ஒலி. எக்கணத்தில் அது மாறுகிறது உயிர்கொல்லும் இசையாய். செவிச்சவ்வுகளின் நுண்துளைகளை அது எவ்வாறு கண்டடைகிறது. அவ்வாறே நான் உன்னைக் கண்டடைந்தேன்.
நீண்ட தோள்சாயும் யாழின் தந்திக்கம்பிகளில் இருந்து வெளியேறும் ஒலியென நான் வெளியேறுகிறேன். துயரம் தோய்ந்த இசைத்துணுக்குகளாய் மாற்றிப் பரவச்செய்கிறது உன் மௌனம். ரீங்காரம் அடங்கி மௌனப்பூக்களாய் உதிர்கிறேன். அவ்வாறே நீ என்னைக் கண்டடைந்தாய்.
மௌனப்பூ நான்.
செவிகொள் இசை நீ.
பழியற்ற சொல் பாவம் நான்.
ஒளியின் ஒலி நீ.
பச்சைவாடை வீசும் மாந்தோப்பிலிருந்து வெளியேறிப் பறக்கும் கிளிகளின் அச்சமும் நாணமும் நாமறியாது. அக்கிளிகளின் சப்தம் வானறியாதது. பார். பறவைகளுக்குத்தான் சிறகு தேவை பறக்க. நமக்கு நம் சொற்கள் போதும் வானேறிப் பறக்க.
***********************
அருமை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஒளியின் ஒலி நீ.
பதிலளிநீக்குwow
thanks ulavu.
பதிலளிநீக்குthanks padma.
//ஒளியின் ஒலி நீ.
பதிலளிநீக்குwow//
Same here.