தானமிடும் மனிதன் தன்னை தேவனென கொள்கிறான்.
கண்மூடிய இமைவழி தெரிகிறது தகிப்பின் சிவப்பு. ரசமிழக்கும் ஆடியின் முன் என்ன செய்துவிட முடியும் வெப்பமூச்சு. கருகி அழிகிறது தனித்தலையும் இரட்டைவால் மிருகம். பொறி தேடும் பறவையிடமிருந்து கூண்டை மறைக்கிறான் வேடன். பாழடைந்த காட்டில் ஒற்றையடிப்பாதை ஒன்றை கண்டுபிடிக்கிறான் அகழ்வு செய்பவன். தங்கக்குழம்பின் ஊற்றுவழிஎன கொக்கரிக்கும் அவன் சர்ப்பதோஷம் பெற்று வீழ்கிறான் முதலடியில்.
தானம்பெறும் மனிதன் தன்னை பாவமெனக் கொள்கிறான்.
காற்றின் குளிர்பெற்று ஊற்றுகிறது மேகம். இரவு. இருள். காடு. குளிர் பொறுக்கா ஒளிதேவதை சிலந்தியின் கூட்டில் தஞ்சம் கேட்கிறாள். இரைகளுக்கானது அதன் கூடு. இறக்கம் கொள். மழைத்துளி ஆகிவிடு. இருண்டவனக்கிளையில் பனித்துளியில் தன்னை ஒளித்துக்கொள்கிறது ஒளி.
*************************
ஏற்பதிகழ்ச்சி (ஆத்திச்சூடி) என்பதோடு பொருந்துகிறது கவிதை.
பதிலளிநீக்குமீனாமுத்து-வின் ஆத்திசூடி நீதிக்கதைகள் வலைமனையில் இதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம்:
பிச்சை எடுத்தல் என்பது அவமானம் தரும் செய்கை என்பதில் சந்தேகம் இல்லை. பிச்சை எடுப்பவன், ஒருவனிடத்தில் பிச்சை கேட்கின்ற நேரத்தில் தன்னுடைய உடல் மனம் யாவும் குன்றிப்போய் விடுகிறான்.பிச்சை எடுத்து பிழைத்தல் என்பது தன் மானத்தை விட்டு வயிறு வளர்க்கும் தொழிலாகிவிடுகிறது.
மகாபலிச்சக்கிரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் பெற்ற திருமாலும்கூட தானம் பெற்றதால் ஏற்பட்ட இழிவினால் தனது திருமேனி குன்றி வாமனரானார் என்று புலவர்களும் கற்பனை செய்திருக்கிறார்கள்.
“பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்
சொல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலா மகலவோட்டி மானமென்பதனை வீட்டி
யில்லெலா மிரத்த லந்தோ விழி விழி வெந்த ஞான்றும்”
என்ற செய்யுள் பிச்சை எடுத்து பிழைப்போரின் அவல நிலையை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
//தானம்பெறும் மனிதன் தன்னை பாவமெனக் கொள்கிறான்//
பதிலளிநீக்குஆத்திச்சூடி கதைக்கு பொருத்தமாக ஆதிரன் கவிதை சொல்லியிருப்பது அதிசயம்!அதை உடன் கண்டு கதையை எடுத்துக்காட்டியதும் ஆச்சர்யப்பட வைக்கின்றது ஜெகன்!
(என்)தாலாட்டு,ஆத்திசூடிக்கதைகள் பலரும் அறியும் வண்ணம் எடுத்து செல்வது தங்களின் நல்ல மனதை காட்டுகிறது!
மிகவும் நன்றி ஜெகன்
thanks jegan.
பதிலளிநீக்குthanks meenamuthu.