18.1.10

காமடி பீஸ்


***************************
ஆண்ட்ரியா, ரீமா சென் என்று பெயரிடப்பட்ட இரண்டு பெண் உடல்களுக்கு ஒரு தயாரிப்பாளரை முப்பத்து இரண்டு கோடியை செலவு செய்ய வைக்கலாம் ஒரு திருமண ரத்தையும் செய்துகொள்ளலாம் என்று செல்வராகவன் என்கிற இயக்குனர் திலகம் முடிவுசெய்து விட்டதை த்ரில் படமாக தமிழகம் மற்றும் உலகெங்கும் சென்றவாரம் முதல் திரையில் வெளிச்சம் போட்டு காட்டிகொண்டிருக்கிறார். fuck, boob போன்ற ஹாலிவூட் வார்த்தைகளில் முதல் வார்த்தை ஒலி நீக்கம் சென்சாரினால் செய்யப்பட்டிருகிறது. இரண்டாவது வார்த்தைக்கு அவகளுக்கே அர்த்தம் தெரியாது போல. இரண்டு பெண்களும் ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு திட்டிக்கொல்(ள்)கிறார்கள். கசாப்புக்கடையில் மட்டன்கோலா செய்வதற்காக கறியை கொத்துவதை நாம் பார்த்திருக்கிறோம் அந்த கொத்தை திரைக்கதையில் செய்தது செல்வராகவனுக்கு தன முன்னாள் மனைவியின் மேல் இருக்கும் கோபம் மட்டுமே காரணம் இல்லை, அவர் மீது இருக்கும் காதலும் காரணமாய் இருக்கலாம். படத்தின் பின்னை நவீனத்துவமான கடைசி பிரேம் மட்டும் நன்றாக உள்ளது. ஆனால் இரண்டாம் பாகம் என்கிற கண்ணிவெடியை அவரது மூலையிலே புதைத்துக்கொள்ள வேண்டும். (தொடரும் என்கிற வார்த்தையை பார்த்து மக்களின் டாக் அப்படித்தான் இருந்தது). படத்தில் காமடி டிராக்கே இல்லை கதாநாயகன் கார்த்தியை தவிர. மொத்தத்தில் ஹாலிவூடை பகடி .. இல்லை பிரதி எடுக்கும் காமடி பீஸ் இந்த சினிமா. இப்படத்தை எம் ஜி ஆர் பிறந்த தினத்தன்று பார்த்தது தொலைத்தது என் ஊழ்வினை.

**************************

3 கருத்துகள்:

  1. படித்ததும் செ.ரா மேல் அன்பு கூடிப்​போய்விட்டது போல் இருக்கு!
    படம் பாக்கலே.. இன்னும்.
    சோழ மன்னர்கள் எல்லாம் வருகிற கதை என்று படம் பார்த்த மலையாள நண்பன் ​சொன்னான்.
    1000 ஒருவன் என்பது வருடத்தைக் குறிக்கிறதோ (1000AD)??

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெகன் வருகைக்கு.

    வசு நீ என்ன சொல்றன்னு புரியல.

    பதிலளிநீக்கு