11.12.09

சரிதான்...

ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒரு Saturation Point - க்கு வந்துவிட்டார்கள். கமலும் ரஜினிக்கும் ஒரு காலகட்டத்தில் நடந்தது போல என்று சொல்லலாமா? இனி தமிழுலகில் அவர்கள் இணைகோடுகள்! இந்த ட்ராக்கில் ஹமீதின் ரயில் சந்தோஷக்கூவலுடல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சாத்தியப்பாடு இணையத்தினால் மட்டுமே வந்தது என நம்புகிறேன். வாழ்க இந்தியாவில் இல்லாத உலகத்தமிழ் வாசகர்கள்.
******
முந்தய பதிவில் ஒரு சிறுகதை (அப்படித்தான் நினைக்கிறேன்) எழுதியதின் விளைவாக ஒரு பயங்கரமான முடிவை எடுத்திருக்கிறேன். அது என்ன? நாவல் ஒன்றை தொடராக எழுதுவது. பார்க்கலாம். நாவலின் தலைப்பு "சொல்லுவதெல்லாம் பொய்". மாதத்திற்கு இரண்டு அத்தியாயமாவது எழுதிவிட உத்தேசம்.
*******
ஒபாமாவுடன் ச்சாயா சாபிடறதுக்காகவே இந்தியாவிலே பொறந்தேன்னு பெருமை பட்டவாக்கில தல ரஷ்யாவுக்கும் போயிட்டு வந்துட்டது. இங்க ஒருத்தர் பத்துநாளா உள்துறைய தூங்கவிடல. சரி போகட்டுமேன்னு பாகம் பிரிசுடலாம்னு ஸ்டேட்மென்ட் விட்டா.... நூத்தினாலு சட்டமன்ற உறுபினர்களும் நாலு பாராளுமன்ற உறுப்பினர்களும் கடுதாசி கொடுக்கிறாங்க.
எது நடக்கிறதோ அது நன்றாகவே.........................
********
தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களை பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது. ஏழெட்டு பேரு கூடி கூடி போஸ் கொடுத்து.. ஒரே கத்திரிக்காய ... சாமிகளா எத்தன கொளம்புகடா உலகத்துல இருக்கு? இதுகளுக்கு தமிழ் பேருக வேற. இந்த படங்களைஎல்லாம் பாத்து செத்து சுண்ணாபாகி போனவனோட கத ஒன்னு என்கிட்டே இருக்கு.. 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன்' னு படத்தோட டைட்டில் . யாருக்காச்சும் வேணுமா?
*******

3 கருத்துகள்:

  1. //ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒரு Saturation Point - க்கு வந்துவிட்டார்கள்......... இனி தமிழுலகில் அவர்கள் இணைகோடுகள்!//
    Can you elaborate on this point?

    I thought 'saturation' and 'parallel lines' are two different things. Am I missing something here?

    பதிலளிநீக்கு
  2. defnetly there is difference between 'parallal line' and saturation point.
    ஆனால், இங்கு நான் சொல்ல வந்தது இரண்டுபேருக்குமான கொடுக்கல் வாங்கல். இனி இவர்களிடம் பொதுவாக அல்லது தனித்தனியாக எதுவுமில்லை. ஒரு புள்ளியில் இணைந்து ஒற்றைச்சரடாகிப்போனார்கள் என்பது saturation point. அவர்கள் தனித்தனியாக இயங்குகிறார்கள் இது 'parallal line' .

    பதிலளிநீக்கு
  3. They may have become the two sides of the same coin. For that one of them must have 'changed' their stance. (Which is the one is easy to get.) But when you saturate, you stagnate. You don't grow after that. Or move. Or change.

    பதிலளிநீக்கு